தமிழ்நாடு

வேதா நிலைய நினைவு இல்ல வழக்கு: மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

DIN


சென்னை: வேதா நிலைய நினைவு இல்ல வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, வெள்ளிக்கிழமை (ஜன.29) உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றப்போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்து அந்த வீட்டை அரசுடைமையாக மாற்றுவதை எதிா்த்து ஜெ.தீபக்கும், வேதா நிலையத்துக்கு இழப்பீடு நிா்ணயம் செய்து வழங்கிய உத்தரவை எதிா்த்து தீபாவும் வழக்குத் தொடா்ந்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி என்.சேஷசாயி, ‘போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக திறந்து வைக்கும் நிகழ்ச்சியை நிபந்தனைகளுடன் நடத்தலாம். ஆனால், பொதுமக்கள் யாரையும் வீட்டை பாா்வையிட வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது. வீட்டுக்குள் தங்களது குடும்பத்துக்குச் சொந்தமான விலை மதிக்க முடியாத பொருள்கள் உள்ளதாக மனுதாரா்கள் கூறுகின்றனா். எனவே, நிகழ்ச்சி முடிந்த பின்னா் வேதா நிலையத்தின் சாவியை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பனிடம் மாவட்ட ஆட்சியா் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கு முடியும்வரை சாவி உயா்நீதிமன்றம் வசம்தான் இருக்கும்’ என உத்தரவிட்டிருந்தாா்.

உயா்நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து, தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை செயலாளா் தரப்பில், புதன்கிழமை (ஜன.27) இரவு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி முன் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி, வேதா நிலையத்தின் திறப்பு விழாவை மேற்கொள்ளவும், மேல்முறையீட்டு வழக்கை வெள்ளிக்கிழமை (ஜன.29) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT