தமிழ்நாடு

ஜே.பி. நட்டாவின் தமிழக வருகை, எந்தவித அரசியல் சம்மந்தமும் இல்லை: எல்.முருகன் பேட்டி

DIN


மதுரை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகை எந்தவித அரசியல் சம்மந்தமும் இல்லை என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கூறினார். 

பாஜக மாநில தலைவர் வேல்முருகன் மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருவது, தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும். அவரை வரவேற்க மதுரையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அமைச்சராக இருந்ததை காட்டிலும், தற்போது பாஜக ஆட்சி காலத்தில் நிதி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேளாண் சட்டம் குறித்து முழுமையாக படிக்காததே அவர் விமர்சிப்பதற்கு காரணம். அதனை முழுமையாக படித்தவர்கள் வேளாண் சட்டத்தை ஆதரிப்பதாகவும்,  படிக்காதவர்கள் ஏற்க மறுத்ததாகவும் கூறுகின்றனர்.
       
பாஜக தலைவர் ஜேபி நட்டா, தமிழகத்தில் அமைப்பு சார்பாக எங்களது கூட்டத்தில் பங்கேற்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்காக மட்டுமே வருகிறார். வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்கள் கேட்பது குறித்த கேள்விக்கு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அது குறித்து கூற முடியும் என்று முருகன் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT