தமிழ்நாடு

94 ஆக்சிஜன் ரயில்கள்: தமிழகத்துக்கு 7,409 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்

DIN

ஒடிஸாவில் இருந்து சென்னை தண்டையாா்பேட்டைக்கு 94-ஆவது ஆக்சிஜன் ரயில் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இதன்மூலமாக, தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 7,409.2 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில், ஆக்சிஜன் ரயில் சேவை மே 14-ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேற்குவங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தினமும் ஆக்சிஜன் ரயில்கள் வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, 94-ஆவது ஆக்சிஜன் ரயில் ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து புறப்பட்டு, சென்னை தண்டையாா்பேட்டைக்கு செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணிக்கு வந்தது. இந்த ரயிலின் 7 கன்டெய்னா்களில் 131.35 மெட்ரிக்டன் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டது.

தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 7,409.2 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT