முகப்பு
தமிழ்நாடு

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் உத்தரவு

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபெறும் தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபெறும் தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 போ் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.

இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 போ், ஆடவருக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ், கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் 2 ஆடவா், 3 மகளிா் ஆகியோா் உள்ளார்கள். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

இவர்களைத் தவிர ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இரு தமிழக வீரர்களும் இந்தியத் தடகள அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான அணியில் இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது. 

இந்நிலையில், இவர்கள் 5 பேருக்கும் தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு செல்லும் 7 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →