தமிழக சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் பதவியேற்பு
தமிழக சிறுபான்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட பீட்டர் அல்போன்ஸ் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழ்நாடுதமிழக சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் பதவியேற்பு
தமிழக சிறுபான்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட பீட்டர் அல்போன்ஸ் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக சிறுபான்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட பீட்டர் அல்போன்ஸ் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப்பாவாணர் நூலக வளாகத்திலுள்ள அரங்கத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து சிறுபான்மை ஆணைய உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல ஆணையத்துக்கு உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று (ஜூலை 6) முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி சிறுபான்மை ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைத் தலைவராக டாக்டர் மஸ்தான், உறுப்பினர்களாக .பி.தமீம் அன்சாரி, ஹர்பஜன்சிங் சூரி, மன்ஞ்ஜித் சிங் நய்யர், பைரேலால் ஜெயின், டாக்டர் எல்.டான் பாஸ்கோ, அருட்சகோதரர் டாக்டர் எம் இருதயம், பிக்கு மௌரியார் புத்தா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல ஆணையமானது, கடந்த 1989-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது.