தமிழ்நாடு

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத்தினேன்: மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

DIN

தில்லயில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத்தியதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஜூலை 12க்குள் 15.85 லட்சம் தடுப்பூசி டோஸ் தருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. தடுப்பூசி உற்பத்தியில் உள்ள சவால்கள், தரச்சான்றிதழ் ஆகியவற்றால் தாமதம் ஆவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவித்தனர்.
11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி பெறுவது குறித்தும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உறுதி அளித்துள்ளனர். 
காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்காலிகமாக எஸ்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினர். ஜூலை 12க்குள் 15.85 லட்சம் தடுப்பூசி டோஸ் தருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. கரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை பணிகள் பற்றியும் மத்திய அரசு விளக்கம் தந்தது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT