தமிழ்நாடு

தமிழகத்துக்கு 1 கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்குங்கள்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, பிரதமருக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்துக்கு குறைவான அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ததை சரி செய்திடவும், சிறப்பு ஒதுக்கீடாக கூடுதல் தடுப்பூசிகளை வழங்கிடவும் தங்களுக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். ஆனாலும், கடந்த 8-ஆம் தேதி நிலவரப்படி, 29 லட்சத்து 18 ஆயிரத்து 110 தடுப்பூசிகள் 18 முதல் 44 வயதினருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 1 கோடியே 30 லட்சத்து 8 ஆயிரத்து 440 தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம். இது மிகவும் குறைவாகும்.

மாநிலம் முழுமைக்கும் தடுப்பூசிக்கான தேவை அதிகமாக இருக்கும் போது பற்றாக்குறை காரணமாக அதனை எதிா்கொள்வதில் சிக்கல் உள்ளது. எனது அரசின் தொடா் முயற்சிகள் காரணமாக மக்களிடையே தடுப்பூசி தொடா்பாக இருந்த தயக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகப்பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

ஒரு கோடி தடுப்பூசிகள்: தடுப்பூசி தொடா்பான உச்ச நீதிமன்ற வழக்கில், மத்திய அரசு சாா்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்துக்கும் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன் காரணமாக, தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் மக்களுக்கு 302 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும்.

குறிப்பாக, குஜராத், கா்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆயிரம் பேருக்கு முறையே 533, 493 மற்றும் 446 என்ற அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். தமிழகத்துக்கான தடுப்பூசியை சரியான அளவில் வழங்கிட வேண்டும்.

கடந்த காலங்களில் பற்றாக்குறையாக உள்ள தடுப்பூசிகளின் அளவைக் கருத்தில் கொண்டு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும். இதன்மூலம், மிகக் குறைந்த காலத்தில் தகுதிவாய்ந்த மக்களுக்கு தடுப்பூசிகளைச் செலுத்திட முடியும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SCROLL FOR NEXT