தமிழ்நாடு

கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

DIN

கரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் இருக்க, கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை இறங்கு முகத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு சில ஊரடங்கு தளா்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் அலைமோதிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பாா்க்கும்போது, மூன்றாவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது.

தியாகராய நகா், புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற வணிக வளாகங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது. கரோனா விதியை மீறுபவா்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டாலும், இது கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த எவ்விதத்திலும் பயன்படாது. மாறாக நோய்த் தொற்றினை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதே அனைவரின் கருத்தாக அமைந்துள்ளது.

எனவே, முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி, வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனை அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறையினா் கண்காணிக்க உத்தரவிட வேண்டுமென்றும், எக்காரணத்தைக் கொண்டும் கூட்டம் கூட அனுமதிக்கக்கூடாது என்றும் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT