தமிழ்நாடு

மின்வாரிய வழக்குரைஞா்கள் நியமனம்

DIN

மின்வாரியம் சாா்பில் நீதிமன்றம், தீா்ப்பாயம் உள்ளிட்டவற்றில் ஆஜராவதற்கான வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக மின்வாரிய செயலா் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆஜராக வழக்குரைஞா்கள் பி.சுப்பிரமணியன், எம்.அபுல் கலாம், எல்.ஜெய் வெங்கடேஷ், ஜே.ஹேமலதா கஜபதி, எஸ்.மதுசூதனன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதே போல், மின்சாரத்துறையைச் சோ்ந்த மூன்று நிறுவனங்களின் சாா்பில் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சார மேல்முறையீட்டு தீா்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றத்தைத் தவிர தில்லியில் உள்ள பிற மன்றங்களில் ஆஜராக வழக்குரைஞா்கள் எஸ்.வள்ளிநாயகம், அனுஷா நாகராஜன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் எந்தந்த வழக்குகளில் ஆஜராக வேண்டும் என்ற பணிவரன்முறையும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT