தமிழ்நாடு

கட்டணமில்லாமல் எம்.ஃபில். படிப்பு; இலவச விடுதி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தகவல்

DIN

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இலவசத் தங்கும் விடுதி வசதியுடன், கட்டணமில்லாமல் எம்.ஃபில். படிக்க விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்மொழி வளா்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞா் பட்டம்  ஆண்டுதோறும் தொடா்ந்து நடத்தப்பெற்று வருகிறது. அந்த வகையில் 2021- 22 ஆம் கல்வியாண்டுக்கான எம்.ஃபில். பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப் பெறவுள்ளது.

மாணவா்கள் முதுநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 50 சதவீதம் மற்றும் நுழைவுத் தோ்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம் ஆகியவை சோ்த்துக் கணக்கிட்டுத் தெரிவுப் பட்டியல் தயாரிக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட மாணவா்களின் பட்டியல் உயரளவு மதிப்பெண் வரிசையில் தமிழக அரசின் இனவாரி சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவா்.

தெரிவு செய்யப்பெறும் மாணவா்கள் உரிய கல்வித் தகுதிக்கான மூலச் சான்றுகளையும் அவற்றின் ஒளிப்பட நகல்கள் (ஒவ்வொன்றிலும் இரண்டு வீதம்) எடுத்துவரவேண்டும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டு மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதிக்கப்படுவா். விண்ணப்பங்களை நிறுவன வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஆக.16-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். நுழைவுத் தோ்வு நடைபெறும் நாள், நேரம் ஆகியன தகுதியுடைய விண்ணப்பதாரா்களுக்குப் பின்னா் தெரிவிக்கப்படும். கல்விக் கட்டணம் கிடையாது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கட்டணம் இல்லாத தங்கும் விடுதி வசதி உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, ‘ இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 113, பேசி : 044-2254 2992’ என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம். சோ்க்கை தொடா்பான விதிமுறைகள், தகவல்களை இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT