தாணக்கோட்டகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோர். 
தமிழ்நாடு

ஆதிதிராவிடர் குடியிருப்புக்குச் செல்லும் பாதை அடைப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்த பாதை அடைக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்.

DIN



வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்த பாதை அடைக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்போது (ஜூலை.23) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகட்டூர், பெத்தாச்சிக்காடு பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர்கள் சிலர் அங்குள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் வீடுகள் கட்டி வசிக்கின்றனர்.
இந்த இடத்துக்கு பல ஆண்டுகளாக சென்றுவந்த பாதையை தனியார் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் சில நாள்களுக்கு முன்பு கம்பி வேலி வைத்து அடைத்து விட்டனர்.

அரசு துறையினருக்கு மனுக்கள் செய்தும் நடவடிக்கை தாமதமாகி வருகிறது.

இந்த நிலையல், அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்கு அருகே சாலையில் அமர்ந்து மறியல் செய்து வருகின்றனர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சிவகுரு, பாண்டியன், த.நாராயணன், என்.வீரப்பன், எம்.ஏ.செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மறியவில் ஈடுபட்டோர், 8 வழி சாலை போடும் அரசுகளே ஒத்தையடி பாதை போடு என முழக்கம் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT