தமிழ்நாடு

சொந்த மக்களையே உளவு பார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்: மார்க்சிஸ்ட் தீர்மானம்

DIN

சொந்த மக்களையே உளவு பார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பிற்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது, சொந்த மக்களையே உளவு பார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம், கியூபா மீதான பொருளாதார தடையை அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் திரும்பப் பெற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழக கல்வித்துறை!

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

SCROLL FOR NEXT