தமிழ்நாடு

வடுவூர் ஏரியில் கவிழ்ந்த டிப்பர் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் ஓட்டுநர்!

DIN


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் ஏரியில், செயற்கை மணல் ஏற்றி வந்த லாரி வெள்ளிக்கிழமை ஏரிக்குள் விழுந்து கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் கண்ணன் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

கரூரிலிருந்து நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு செயற்கை மணல்(எம்.சாண்ட்)ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி வந்துகொண்டிருந்தது. லாரியை கரூரை சேர்ந்த கண்ணன(50) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்த லாரி, வெள்ளிக்கிழமை அதிகாலை தஞ்சை, மன்னார்குடி பிரதானசாலையில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள வடுவூர் ஏரி அருகே வந்துகொண்டிருந்த போது, ஓட்டுநரின் கண் அயர்வு காரணமாக, கட்டுப்பாட்டினை இழந்து ஏரிகரையில் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஏரிக்குள் விழுந்து கவிழ்ந்தது. தற்போது, ஏரியில் தண்ணீர் நிரம்பி வருவதால் லாரி பாதி அளவுக்கு நீரில் மூழ்கியது. இதில்,காயமின்றி ஓட்டுநர் கண்ணன் உயிர்தப்பினார்.

பின்னர், தஞ்சையிலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, ஏரியில் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டனர். இது குறித்து வடுவூர் காவல்நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT