கலாம் நினைவுநாள்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர் மரியாதை
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 6-வது நினைவு நாளை முன்னிட்டு, புதுச்சேரி லாசுப்பேட்டை, குறிஞ்சி நகரில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் உள்ள அவரது சிலைக்கு, செவ்வாய்க்கிழமை புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து கோளரங்க வளாகத்தில், நினைவு தினத்தையொட்டி ஆளுநர் மற்றும் முதல்வர் மரக்கன்றுகளை நட்டனர்.