கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புதிய மின் இணைப்பிற்கு லஞ்சம் கேட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கையும் களவுமாக பிடிபட்டார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (32). இவர் புதிய தொழில் தொடங்குவதற்காக மின் இணைப்புப் பெற விண்ணப்பித்திருந்தார். புதிய இணைப்பு தர ரூ. 10,000 லஞ்சமாக தர வேண்டும் என செயற்பொறியாளர் ஜெயசுதாகர் கட்டாயப்படுத்தி உள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரகுமார், இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். போலீசாரின் அறிவுரையின்படி, சந்திரகுமார், ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை செயற்பொறியாளர் ஜெயசுதாகரிடம் அவரது அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸார் கையும் களவுமாக செயற்பொறியாளர் ஜெ.சுதாகரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.