ரத்ததானம் செய்த விழுதுகள் இளைஞர் மன்ற இளைஞர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து இரத்ததான சான்றிதழ்களை வழங்குகிறார் பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் ஆசியா. 
தமிழ்நாடு

டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினம்: ரத்ததானம் செய்து மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இளைஞர்கள்

டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இளைஞர்கள் ரத்ததானம் செய்து, மருத்துவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

DIN

டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினத்தை முன்னிட்டு பெரியகுளம் விழுதுகள் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானம் செய்து, மருத்துவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினத்தையடுத்து விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில் பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தானம் செய்யப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் ஆசியா கலந்துகொண்டு விழுதுகள் இளைஞர் மன்றத்திற்கு ரத்ததான சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் விழுதுகள் இளைஞர் மன்ற துணைச் செயலாளர் அஜீத் பாண்டி, நிர்வாகிகள் தனலெட்சுமி, குமார், தமிழரசன் மற்றும் ரத்த வங்கி செவிலியர்கள் ஹேமலதா, மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மருத்துவர் ராம்குமார் வாழ்த்துகளை தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT