தமிழ்நாடு

வேளாண் சட்ட நகலை எரித்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

DIN

மன்னார்குடியில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாய சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கங்கள் இணைந்து, ஜூன். 6-ஆம் தேதி முழுப் புரட்சி தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்தும். அதனை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி மன்னார்குடி தலைமை அஞ்சல் நிலையம் அருகே, வெள்ளிக்கிழமை வேளாண் சட்ட திருத்த நகல்களை எரிக்கும் போராட்டம் சிபிஐ விவசாய சங்க நகரச் செயலர் வி.எம்.க வியபெருமாள், சிபிஎம் விவசாய சங்க நகரச் செயலர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

சட்ட நகலை தீயிட்டு எரிக்க முயன்ற விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர், கோரிக்கையை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT