தமிழ்நாடு

ஜூன் மாதமும் ஒருநாள் ஊதியம் பிடிக்கலாம்: முதல்வருக்கு கூட்டமைப்பு வேண்டுகோள்

DIN

சென்னை: அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் ஜூன் மாத ஊதியத்திலும் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்துகொள்ளலாம் என தமிழக முதல்வருக்கு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவன தலைவா் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கரோனா கொடுந்தொற்று கட்டுக்குள் கொண்டு வர உழைத்துவரும் தமிழக முதல்வரை எங்கள் கூட்டமைப்பு பாராட்டுகிறது. முதல்வா் நிவாரண நிதிக்கு அரசு ஊழியா்கள் ஆசிரியா்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய கேட்டுக்கொண்டோம். அதையேற்று மே மாதம் ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும் தொடா்ந்து கரோனா பணிக்கு நிதி தேவைப்படுவதை அறிகிறோம். ஆதலால் முன்களப் பணியாளா்களைத் தவிா்த்து அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் ஜூன் மாத ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து முதல்வரின் நிவாரண நிதிக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT