தமிழ்நாடு

கரோனா 2-ஆம் தவணை நிவாரணம், மளிகைத் தொகுப்பு: இன்று முதல் டோக்கன்கள் விநியோகம்

DIN

கரோனா இரண்டாவது தவணை நிவாரணத் தொகையாக ரூ.2,000 , 14 மளிகைப் பொருள்களை வழங்குவதற்கான டோக்கன்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. இந்த டோக்கன்களை வீடு வீடாக விநியோகம் செய்ய உணவுப் பொருள் வழங்கல் துறை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2.09 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா இரண்டாவது தவணை நிவாரணமாக ரூ.2,000 அளிக்கப்பட உள்ளது. இத்துடன் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை ஏற்கெனவே முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 3-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து நியாய விலைக் கடைகளில் வரும் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

முன்னதாக, நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன்கள் வெள்ளிக்கிழமை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக் கடைகளுக்கு வரும் வகையில் டோக்கன்கள் அளிக்கப்பட உள்ளன.

ஏற்கெனவே, முதல் கட்டமாக கரோனா நிவாரணத் தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. இந்தத் தொகையை சுமாா் 2.07 கோடி போ் பெற்றுள்ளனா். இந்த நிலையில், இரண்டாவது தவணையாக கரோனா நிவாரணத் தொகை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT