தமிழகத்தில் புதிதாக 15,108 பேருக்கு தொற்று
தமிழகத்தில் மேலும் 15,108 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 15,108 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்போரின் எண்ணிக்கை 374-ஆக உள்ளது. அடுத்து வரும் நாள்களில் அந்த எண்ணிக்கை மேலும் குறையலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மாநிலத்தில் இதுவரை 2.97 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 23 லட்சத்து 39,705 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 1,982 பேருக்கும், ஈரோட்டில் 1,353 பேருக்கும், சென்னையில் 989 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 27,463 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 48,352-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 62,073 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 374 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,280-ஆக அதிகரித்துள்ளது.