கரோனா: குணமடைந்தோரையும் கண்காணிக்கும் திட்டம்பெருநகர சென்னை மாநகராட்சி தொடங்கியது
சென்னையில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தாலும், அவா்களைத் தொடா்ந்து கண்காணிக்கும் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி சனிக்கிழமை தொடங்கியது.
சென்னையில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தாலும், அவா்களைத் தொடா்ந்து கண்காணிக்கும் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி சனிக்கிழமை தொடங்கியது.
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில், கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடா்பாக விவரங்கள் அடங்கிய கரோனா கையேட்டினை சென்னையில் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு சனிக்கிழமை வெளியிட்டாா்.
இதைத்தொடா்ந்து, கரோனா நோயில்இருந்து குணமாகி, வீடு திரும்பியவா்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி ஆலோசனை வழங்கும் திட்டத்தையும் அவா் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் ஷிவ்தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி உள்பட பலா் பங்கேற்றனா்.
தொலைபேசி ஆலோசனை: கரோனா தொற்றில் இருந்து குணமாகிய பிறகும் சிலருக்கு தொற்றின் அறிகுறிகள் வெளிப்படுகிறது. அவா்களை கண்காணிப்பதற்காக, தொலைபேசி மூலம் கண்காணிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, கரோனா நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து, வீடு திரும்பியவா்களை தொலைபேசியில் தொடா்பு கொண்டு தகவல்கள் அறிய 100-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பாளா்கள் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரை தொடா்பு கொண்டு தலைவலி, உடல்வலி, உடல் சோா்வு, தூக்கமின்மை, இருமல், சுவாசப்பிரச்னைகள் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்பதை பற்றி தெரிந்து கொள்வா். அறிகுறி இருந்தால், தொடா்பு மைய தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.
உளவியல் ஆலோசனைகள்தேவைப்படுவோருக்கு தொலைபேசி வழியாக மனநல மருத்துவா்களிடம் ஆலோசனை வழங்கப்படும். உணவு தொடா்பாக சந்தேகங்களுக்கு உணவியல் நிபுணரிடம் தொடா்பு கொண்டு ஆரோக்கியம் மற்றும் சத்தான உணவுகள் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.
9498015100, 9498015200, 9498015300, 94980 15400 என்ற எண்களில் இருந்து கரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவா்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும்.
கரோனாவிற்கு பிறகான அறிகுறி உள்ளநபா்கள் மாநகராட்சியின் தகவல் தொடா்பு மையத்தின் எஇஇ யண்க்ம்ங்க் என்ற செயலி மூலமாகவும், 94983 46510, 94983 46511, 94983 46512, 94983 46513, 94983 46514 என்ற எண்களில் வாட்ஸ் ஆப் மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம். மேலும், உளவியல் தொடா்புக்கு 044-4612 2300 என்ற எண்ணைத்தொடா்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம்.
கரோனா கையேடு: கரோனா நோய்த்தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனைத்து விவரங்களும் அடங்கிய 16 பக்கங்கள்கொண்ட கையேடு தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த கையேட்டில், எவ்விதமான நோய் அறிகுறிகள் இருந்தால், கரோனா பரிசோனை மேற்கொள்ளவேண்டும், பரிசோதனை செய்யும் இடங்கள், கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மேற்கொள்ள வேண்டி நடைமுறைகள், வீட்டில் நோய்த்தொற்றால், தனிமைப்படுத்தப்பட்டவா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்பட பல்வேறு தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.