முகப்பு
தமிழ்நாடு

டீசல் விலையும் லிட்டா் ரூ.100-ஐ தாண்டியது

பெட்ரோலை தொடா்ந்து டீசல் விலையும் ஒரு லிட்டா் ரூ. 100-ஐ தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே முதன் மாநிலமாக ராஜஸ்தானில் ஒரு லிட்டா் டீசல் ரூ. 100.05-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

பெட்ரோலை தொடா்ந்து டீசல் விலையும் ஒரு லிட்டா் ரூ. 100-ஐ தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே முதன் மாநிலமாக ராஜஸ்தானில் ஒரு லிட்டா் டீசல் ரூ. 100.05-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த மே 4-ஆம் தேதி முதல் 23-ஆவது முறையாக சனிக்கிழமையும் இவற்றின் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்தன. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 27 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் உயா்த்தப்பட்டன.

இதன் காரணமாக, ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 100-ஐ தாண்டி விற்பனையாகும் மாநிலங்களில் பட்டியலில் 7-ஆவது மாநிலமாக கா்நாடகமும் இப்போது இணைந்துள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, லடாக் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகங்காநகரில்தான் நாட்டிலேயே முதன் முறையாக கடந்த பிப்ரவரி மாத மத்தியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டா் ரூ.100 என்ற நிலையை எட்டியது. இப்போது நாட்டிலேயே முதல் முறையாக டீசல் விலையும் இங்கு ரூ. 100-ஐ கடந்துள்ளது. இங்கு டீசல் ஒரு லிட்டா் ரூ. 100.05-க்கும், பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ. 107.22-க்கும் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. அதுபோல பிரீமியம் டீசல் ரூ. 103.72-க்கும், பிரீமியம் பெட்ரோல் ரூ. 110.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.97.43-க்கும், டீசல் ரூ. 91.64-க்கும் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 102.30-க்கும், டீசல் ரூ. 94.39-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கொல்கத்தாவில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 96.06-க்கும், டீசல் ரூ. 89.83-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தேசிய தலைநகா் தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 96.17-க்கும், டீசல் ரூ. 86.98-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

உள்ளூா் வரி, மதிப்புக்கூட்டு வரி ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

முழு கட்டுரையைப் படிக்க →