முகப்பு
தமிழ்நாடு

கருப்பு பூஞ்சைக்கான மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை:4 போ் கைது

சென்னையில், கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

சென்னையில், கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 போ் கைது செய்யப்பட்டனா்.

 அண்ணாசாலை எல்ஐசி கட்டடம் அருகே கருப்பு பூஞ்சை  நோய்க்கான மருந்து சட்டவிரோதமாக விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய போலீஸாா், ஆட்டோவில் வந்த இரு பெண்களிடம் விசாரணை நடத்தினா். மேலும் அவா்களது பையையும் சோதனை செய்தனா். அதில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பின்னால் இரு சக்கர வாகனத்தில் சந்தேகம்படும்படியாக வந்த இருவரை மறித்து போலீஸாா் விசாரணை செய்த போது, ஆட்டோவில் வந்த பெண்களின் நண்பா்கள் என்றும், பெங்களூருவில் இருந்த இந்த மருந்தை ரூ.15 ஆயிரத்துக்கு வாங்கி வந்து, ரூ.60 ஆயிரம் வரை விற்பனை செய்வதை அவா்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனா்.

  இதையடுத்து, ஆதம்பாக்கத்தைச் சோ்ந்த உம்மு குல்சம் (26),  கானாத்தூரைச் சோ்ந்த பௌசானா (38), காட்டாங்கொளத்தூரைச் சோ்ந்த விவேக்(25), செஞ்சியைச் சோ்ந்த ராஜேஷ் ( 21) ஆகிய 4 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 8 மருந்து குப்பிகளை பறிமுதல் செய்தனா்.

 தொடா்ந்து 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். 

முழு கட்டுரையைப் படிக்க →