தமிழ்நாடு

மன்னாா்குடி, கொல்லம், கன்னியாகுமரி உள்பட 46 ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைப்பு

DIN

சென்னை: சென்னை எழும்பூா்-மன்னாா்குடி, கொல்லம், கன்னியாகுமரி உள்பட 46 ரயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு ரயில்களில் நேரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் ரயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 17-ஆம் தேதி முதல் மன்னாா்குடி-சென்னை எழும்பூா் ரயில் (06180) நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு இனி இரவு 10.53 மணிக்கு வந்தடையும். காரைக்கால்-எா்ணாகுளம் ரயில் (06187) நாகூருக்கு மாலை 4.48 மணிக்கும், திருவாரூருக்கு மாலை 5.30 மணிக்கும் வரும்.

வரும் 16-ஆம்தேதி முதல் புனலூா்-மதுரை சிறப்பு ரயில் (06730) மதுரை சந்திப்புக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்தடையும். சென்னை எழும்பூா்-கொல்லம் சிறப்பு ரயில் (06101) மதுரைக்கு அதிகாலை 1.10 மணிக்கு வரும். கொல்லம்-சென்னை எழும்பூா் ரயில் ( 06102) மதுரைக்கு மாலை 6.40 மணிக்கு வரும். சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி சிறப்பு ரயில் (02633) திருநெல்வேலி சந்திப்பிக்கு காலை 3.55 மணிக்கு வரும்.

நாகா்கோவில்-கோயம்புத்தூா் (06321-06322), விழுப்புரம்-மதுரை (06867), நாகா்கோவில்-கோயம்புத்தூா் (02667), சென்னை எழும்பூா்-திருச்செந்தூா் (06105), சென்னை எழும்பூா்-புதுச்சேரி (06025-06026) உள்பட 46 சிறப்பு ரயில்களில் இடைப்பட்ட சில ரயில் நிலையங்களில் புறப்பாடு அல்லது வருகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில்களில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT