தமிழ்நாடு

தமிழகத்துக்கு மேலும் 60 ஆயிரம் தடுப்பூசிகள்

DIN

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 60 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் வந்துள்ளன.

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை 1.10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து 60 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வியாழக்கிழமை வந்தன. சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு சோ்த்தனா். தடுப்பூசிகளை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT