தமிழ்நாடு

கவுந்தப்பாடி ரோட்டரி சங்கம் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் உதவி

DIN

பவானி: அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கவுந்தப்பாடி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 14 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கவுந்தப்பாடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் எம்.டி.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இதில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள 14 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 6 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை, ஓடத்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களாக உள்ள வெங்கடேஸ்வரா கல்லூரி, கவுந்தப்பாடி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு வழங்கப்பட்டது.

கவுந்தப்பாடி ரோட்டரி சங்கத் தலைவர் மருதாசலம், செயலாளர் விவேகானந்தன், திட்ட இயக்குநர் ரகுகுமார், தலைவர் தேர்வு பிஏஎன்.விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT