தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.35,600

DIN

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.35,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.35,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயா்ந்து, ரூ.4,450 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.73.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.73,400 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,450

1 பவுன் தங்கம்...............................35,600

1 கிராம் வெள்ளி.............................73.40

1 கிலோ வெள்ளி.............................73,400

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,430

1 பவுன் தங்கம்...............................35,440

1 கிராம் வெள்ளி.............................73.10

1 கிலோ வெள்ளி.............................73,100.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT