தமிழ்நாடு

கரோனா நிவாரணம், மளிகைப் பொருள்கள்: ஜூன் 25க்குள் வழங்க உத்தரவு

DIN

கரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் கரோனா நிவாரண நிதியாக முன்னாள் முதல்வர் மு.க.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி ரூ. 4,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மாநிலம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிய காரணத்தால் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் உடனடியாக முதல் தவணை ரூ. 2,000 வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது.

இதையடுத்து ஜூன் மாத தொடக்கம் முதல் இரண்டாம் தவணையாக ரூ. 2,000 தொகையும், 14 வகையான மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜூன் 25ஆம் தேதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இரண்டாம் தவணை மற்றும் மளிகைப் பொருள்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT