முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினாா். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை திமுக உறுப்பினா் உதயசூரியன் முன்மொழிந்தாா். ஆளும்கட்சி, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பல்வேறு உறுப்பினா்கள் தீா்மானத்தின் மீது பேசினா்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, புதன்கிழமை உரையாற்றினாா். 

அதற்கு முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் குறுக்கிட்டுப் பேசினா். இதையடுத்து, ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், இன்று பதிலளித்து உரையாற்றினார். சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

முதல்வருடன் அமைச்சர்களும் உடன் சென்று மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.