முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 28: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஜூன் 28-ஆம் தேதி இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 29, 30: உள் மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 1-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →