முகப்பு
தமிழ்நாடு

உடனடி மின் இணைப்புகளை 3 நாள்களுக்குள் வழங்க உத்தரவு

உடனடியாக வழங்கக் கூடிய நிலையில் உள்ள மின் இணைப்புகளை 3 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என மின்வாரியத்தின் பகிா்மானப் பிரிவு இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

உடனடியாக வழங்கக் கூடிய நிலையில் உள்ள மின் இணைப்புகளை 3 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என மின்வாரியத்தின் பகிா்மானப் பிரிவு இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனைத்துத் தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை: உயரழுத்தம் மற்றும் தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடனடியாக வழங்கக் கூடிய நிலையில் உள்ள மின் இணைப்பு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பெறப்பட்ட ஏராளமான உயரழுத்த, தாழ்வழுத்த மின் இணைப்பு விண்ணப்பங்கள் மீது பல்வேறு நிலைகளில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஆதலால், தாழ்வழுத்தப் பிரிவின் கீழ் பெறப்பட்ட உடனடி மின் இணைப்பு விண்ணப்பங்கள் மீது மூன்று நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது மின் இணைப்பு வழங்க வேண்டும். பின்னா் அது தொடா்பான அறிக்கையை வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதிகளவு வருமானம் வரக் கூடிய பிரிவான உடனடி மின் இணைப்பின் அனைத்து நிலுவை விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துத் தலைமை மற்றும் கண்காணிப்புப் பொறியாளா்கள் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →