முகப்பு
தமிழ்நாடு

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முதல்வர் நிவாரணத்துக்கு ரூ.1 கோடி வழங்க ஏற்பாடு

கரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வரிடம் ரூ.1 கோடி வழங்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றோர்.
பகிர்:


திருவள்ளூர்: கரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வரிடம் ரூ.1 கோடி வழங்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர் ஜெயின் நகரில் உள்ள அச்சங்க அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமிபதி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக அச்சங்ககத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் வரவேற்றார். 

இதில், மாநில நிர்வாகிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். இதில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அதில், திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் அன்பழகன் முதல் கட்டமாக ஆசிரியர்கள் அளித்த ரூ.11 லட்சத்திற்கான கசோலையை மாநில பொதுச் செயலாளரிடம் அளித்தனர். இந்த நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியம் வழங்கிய ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். 

இதில் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாநில நிர்வாகிகள் முருகன் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →