சமையல் பொருள்களில் ஒன்றான வெந்தயத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அந்தவகையில், வெந்தயம் ஊற வைத்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
இதற்காக நீங்கள், இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் நன்றாக ஊறிய பின்னர் தண்ணீரின் கலர் இளம் மஞ்சள் நிறமாக மாறியிருக்கும்.
இப்போது காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஊற வைத்த தண்ணீரை குடித்துவிட்டு ஊறிய வெந்தயத்தையும் சாப்பிடலாம்.
மூலிகைகளில் பயன்படுத்தக்கூடிய வெந்தயத்தை உணவுப்பொருள்களில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
வெந்தயம் ஊற வைத்த நீரை அருந்தி வருவதால்
► உடலில் அமிலத்தன்மைகளை சரி செய்ய உதவுகிறது.
► நெஞ்செரிச்சல் சரி ஆகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது.
► நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
► உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியடையச் செய்கிறது.
► மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்னைகளை குணமாக்குகிறது.
► உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.
► பக்கவாதம், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கிறது.
► பெண்களுக்கு மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது.
► ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.