தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி: நிரலம்ப பூரண சக்கராசனத்தில் சிறுவன் உலக சாதனை (விடியோ)

DIN

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுவன் ஒரு நிமிடத்தில் 26 முறை நிரலம்ப பூரண சக்கராசனம் செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் டி.ஜெ.எஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஆர்.ஜி.யுவன்(10).

 இதற்கு முன் ஒரு நிமிடத்தில் 21 முறை நிரலம்ப பூரண சக்ராசனம் செய்த ஒரு மாணவி யோகா உலக சாதனையை படைத்திருந்தார்.

 இந்நிலையில் மாணவன் ஆர்.ஜி.யுவன் 26 முறை நிரலம்ப பூரண சக்கராசனம் செய்து ‛இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’ மற்றும் ‛ஆவ்சம் உலக சாதனை’ புத்தகத்தில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து யோகாவில் உலக சாதனை படைத்த மாணவர்கள் ஆர்.ஜி.யுவன்,  யோகா பயிற்றுனர் எஸ்.சந்தியா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பாராட்டு விழாவின் போது, டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ-வுமான டி.ஜெ.கோவிந்தராஜன், பள்ளி தாளாளர் தமிழரசன் உள்ளிட்டோர் சாதனை மாணவர்கள் மற்றும் பயிற்றுனரை பாராட்டி கவுரவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT