காவல்துறை சிறப்பு அதிகாரி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காவல்துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரனைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலையா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணியளவில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கபடும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.