நாமக்கல் தொகுதியில் அணிவகுத்து சென்ற துணை ராணுவத்தினர். 
தமிழ்நாடு

நாமக்கல் தொகுதியில் துணை ராணுவத்தினர், போலீஸார் அணி வகுப்பு

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நாமக்கல் தொகுதியில் புதன்கிழமை துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

DIN

நாமக்கல்: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நாமக்கல் தொகுதியில் புதன்கிழமை துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய துணை ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் தொகுதிக்கு உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து 90 படைவீரர்கள் வந்திருந்தனர். அவர்கள் நாமக்கல்- துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் கடந்த 5 நாள்களாக தங்கி இருந்தனர். 

இந்த நிலையில் நாமக்கல் நகரப் பகுதியில் புதன்கிழமை துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார். துணைக் காவல் கண்காணிப்பாளர் காந்தி மற்றும் காவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த துணை ராணுவத்தினர், காவல்துறையினர் அணிவகுப்பானது நாமக்கல் காவல் நிலையத்தில் தொடங்கி திருச்சி சாலை, அண்ணாசாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, பேருந்து நிலைய சாலை வழியாக மீண்டும் காவல் நிலையத்தை வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT