மயிலாடுதுறை மூவலூரில் டிஎஸ்பி கே.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்ற போலீஸார். 
தமிழ்நாடு

மயிலாடுதுறையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், காவலர்கள் அணிவகுப்பு

மயிலாடுதுறைக்கு பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் மயிலாடுதுறை போலீஸார் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் அணிவகுப்பு நடத்தினர்.

DIN

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மயிலாடுதுறைக்கு பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் மயிலாடுதுறை போலீஸார் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் அணிவகுப்பு நடத்தினர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை அசம்பாவிதமின்றி நடத்திடவும், சட்ட ஒழுங்கை பாதுகாத்திடவும் மத்திய அரசின் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உதவி கமாண்டர் படைத்தளபதி அமித் திவேதி தலைமையில் 91 பாதுகாப்பு படை வீரர்கள் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் முகாமிட்டுள்ளனர். 

இந்நிலையில், மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாடிவகள் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீஸார் மயிலாடுதுறை மூவலூர் சிவன் கோயிலில் தொடங்கி சித்தர்காடு மேம்பாலம் வரை அணிவகுப்பு நடத்தினர். 

மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கே.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் 40 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் கே.சிங்காரவேலு உள்ளிட்ட 50 போலீஸார் என மொத்தம் 90 பேர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT