தமிழ்நாடு

வரும் 10-ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 10  ஆம் தேதி வெளியிடப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 10  ஆம் தேதி வெளியிடப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விருப்பமனு அளித்துள்ள தொண்டர்களிடமும் நேர்காணலை நடத்தி வருகிறது திமுக. தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுகவினரிடம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவுப் பெறுகிறது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை திமுக மாவட்ட செயலாளர்களுடனான  அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து. கூட்டத்தை காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் தொடங்கி மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

கூட்டத்தில் வரும் 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மாவட்ட செயலாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி படத்தின் படப்பிடிப்பு எப்போது?

எச்-1பி விசா கட்டண உயர்வில் தளர்வு! 1 லட்சம் டாலர் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்? -அமெரிக்க அரசு விளக்கம்

காலமானார் ஆ.ராஜேந்திரன்

தங்கம் விலை சவரன் ரூ.1440 குறைவு!

சுடரும் தீப ஒளி... சோபி சௌதரி!

SCROLL FOR NEXT