உசிலம்பட்டியில் துணை ராணுவப் படையினா் கொடிஅணிவகுப்பு 
தமிழ்நாடு

உசிலம்பட்டியில் துணை ராணுவப் படையினா் கொடிஅணிவகுப்பு

உசிலம்பட்டியில் மத்திய துணை ராணுவப் படையினா், காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கொடிஅணிவகுப்பு நடத்தினா்.

DIN

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மத்திய துணை ராணுவப் படையினா், காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கொடிஅணிவகுப்பு நடத்தினா்.

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கொடிஅணிவகுப்பில்  உசிலம்பட்டி தொகுதிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட வந்துள்ள மத்திய துணை ராணுவப் படையினருடன், ஆயுதப்படை போலீஸாா் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் பங்கேற்றனா். 

துணை ராணுவப் படையினா் கொடிஅணிவகுப்பு

உசிலம்பட்டி துணை கமாண்டோ ஜேக்கப் கோஷி தலைமையில்  90  மத்திய துணை ராணுவப் படையினா், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் ஆயுதப்படை , மாவட்ட போலீஸார் உள்ளிட்ட 250 பேர் கொடிஅணிவகுப்பில் பங்கேற்றனர்.  காவல்  துணை கண்காணிப்பாளர் ராஜன், பயிற்சி காவல்  துணை கண்காணிப்பாளர் சுரேஷ்  கொடிஅணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

 துணை ராணுவப் படையினா் கொடிஅணிவகுப்பு

கொடிஅணிவகுப்பு உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் பகுதியில் தொடங்கி , உசிலம்பட்டி பேருந்து நிலையம் , தேவர் சிலை வழியாக வருவாய் கோட்டாசியர் அலுவலகம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கொடிஅணிவகுப்பு நடத்தினர் . 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT