இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை தென்னந்தோப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்து 952 கிலோ கடல் அட்டை 
தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்தவிருந்த 50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 50 லட்சம் மதிப்பிலான 952 கிலோ கடல் அட்டையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

DIN

மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 50 லட்சம் மதிப்பிலான 952 கிலோ கடல் அட்டையை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம், கடலோர பகுதிகளில் வழியாக இலங்கைக்கு தங்கம், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் கடல் அட்டை உள்ளிட்ட பொருள்களை மர்ம நபாகள் தொடர்ந்து கடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் தொடர்ந்து மத்திய, மாநில உளவுத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மண்டபம் கடலோ பகுதிகள் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தல் நடைபெற உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ரகசிய தகவல் கிடைத்தது. அதனைதொடர்ந்து, ராமேசுவரம் உதவி காவல் கண்காணிப்பாளர் தீபக்ஸ்வாச் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் மண்டபம் அடுத்துள்ள வேதாளை பகுதியில் அல்லாபிச்சை என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு பகுதியில் சோதனையிட்ட போது அதில் 7 மூடைகளில் பதப்படுத்தப்பட்ட 258 கிலோ கடல் அட்டை, 10-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பேரல்களில் ஊற வைத்திருந்த 694 கிலோ கடல் அட்டைகளையும் என சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 952 கிலோ கடல் அட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

இது குறித்து மண்டபம்  காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடல் அட்டையை இலங்கைக்கு கடத்துவதற்குப் பதப்படுத்தப்பட்டு வைத்திருந்ததும் இதில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் குறித்துத் தொடர்ந்து தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குறித்த நேரத்தில் சென்று கடல் அட்யை பறிமுதல் செய்த போலீசாருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பாராட்டு தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையை வனத்துறையினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,833 காவலர்கள் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

தவெக மாநாடு: 200 செவிலியர்கள் உள்பட 600 பேர் கொண்ட மருத்துவக் குழு!

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!

SCROLL FOR NEXT