அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் 
தமிழ்நாடு

அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக வைகைச்செல்வனை எதிர்த்து நேருக்குநேர், 3-வது முறையாக களம் காணுகிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்.

DIN


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக வைகைச்செல்வனை எதிர்த்து நேருக்குநேர், 3-வது முறையாக களம் காணுகிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்.

அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன். 8.8.1949ல் பிறந்த இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு ஆதிலட்சுமி எனும் மனைவியும், நாராயணன், ரமேஷ் ஆகிய இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

சொந்தமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், தற்போது விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக திமுகவில் பதவியில் உள்ளார். இதுவரை மொத்தம் 10 சட்டப்பேரவைத் தேர்தல்களைச் சந்தித்துள்ள இவர், அவற்றில் 8 ல் வெற்றியும் 2ல் மட்டுமே தோல்வியும் கண்ட வெற்றியாளர். ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்த இவர், பின்னர் திமுகவில் இணைந்தார். திமுக ஆட்சியில் மூன்றுமுறை அமைச்சராக இருந்துள்ள இவர் கடந்த 2016 தேர்தலில் வெற்றிகண்டு எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இதனிடையே கடந்த 2011 தேர்தலில் நேருக்கு நேர் மோதலில் வைகைச்செல்வனிடம் தோல்வி கண்ட இவர், மீண்டும் அதே வைகைச்செல்வனை கடந்த 2016 தேர்தலில் வெற்றிகண்டு பழிதீர்த்துள்ளார். இதனிடையே இந்த 2021 தேர்தலிலும் இருவருமே மீண்டும் நேருக்குநேர் மோதும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பிருந்தே தொகுதியில் தேர்தல் தொடர்பான பணிகளில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஈடுபட்டு வந்துள்ளார். அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடிய கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், கட்சியினரை அரவணைத்துச்  ல்வதில் வல்லவர்.

மேலும்,தொகுதி மக்களிடையேயும், பெரும்பாண்மையினர்  முதல் சிறுபாண்மையினர்வரை அனைத்து சமுதாயத் தலைவர்களிடமும் நல்ல நட்புடன்கூடிய பழக்கத்தை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி வருவாய் 29% உயா்வு

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, 4 ஆடுகள் உயிரிழப்பு

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT