விழுப்புரம் தொகுதியில் அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
விழுப்புரம் தொகுதியில் அமமுக வேட்பாளர் பாலசுந்தரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வேட்பு மனு தாக்கலின் 4 ஆம் நாளான புதன்கிழமை விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் பாலசுந்தரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸிடம் பிற்பகல் 1.30 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக வேட்பாளர் பாலசுந்தரம் கட்சியினருடன் ஊர்வலமாக வந்தார். இதேபோன்று விழுப்புரம் தொகுதியில் போட்டியிட மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில் வேட்பாளர் துரைசாமி என்பவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.