தமிழ்நாடு

சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக எம்எல்ஏக்கள்: கலக்கத்தில் அதிமுக தலைமை

DIN

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்து வரும் சிலருக்கு அதிமுக தலைமை தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்காததால், கட்சியின் தலைமைக்கு எதிராக சிலர் சுயேச்சையாக களமிறங்குவது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்து வரும் சிலருக்கு அதிமுக தலைமை தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்காததால், கட்சியின் தலைமைக்கு எதிராக சிலர் சுயேச்சையாக களமிறங்குவது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சி.சந்திரசேகரன்: 
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் காரவள்ளி அடிவார பகுதியை சேர்ந்தவர் சி. சந்திரசேகரன்(52). தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட திமுகவில் மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வந்தார்.

1996-ஆம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவானார். அதன் பின்னர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார்.

2016-இல் அதே சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.  திமுக வேட்பாளர் பொன்னுசாமியை விட சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சேந்தமங்கலம் மட்டும் கொல்லிமலைக்கு பகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த அவர் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக சாா்பில் நான்கு தொகுதிகளுக்கு ஏற்கெனவே எம்எல்ஏவாக உள்ள அமைச்சா்கள் பி.தங்கமணி(குமாரபாளையம்), வெ.சரோஜா(ராசிபுரம்), கே.பி.பி.பாஸ்கா்(நாமக்கல்), பொன்.சரஸ்வதி(திருச்செங்கோடு) வேட்பாளராக அறிவிக்கப்பட்டனா். பரமத்திவேலூருக்கு புதுமுக வேட்பாளராக எஸ்.சேகா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.  மின்துறை அமைச்சா் தங்கமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சேந்தமங்கலம்(எஸ்.டி) தொகுதியில் எம்எல்ஏவான சி.சந்திரசேகரனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்திக்குள்ளான அவா் சுயேச்சையாக போட்டியிடுவதாக தலைமைக்கு எச்சரிக்கை விடுத்தார். தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காததற்கு அமைச்சா் பி.தங்கமணியே காரணம் என்று சந்திரசேகரன் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை கொல்லிமலையில் தனது ஆதரவாளா்களைத் திரட்டி ஆலோசனை நடத்திய அவர் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தவர், கொல்லிமலையில் மலைவாழ் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய பின்னர் தோ்தல் அறிவிப்பை வெளியிட்டார். சனிக்கிழமை சின்னகாரவள்ளி கிராமத்தில் தோ்தல் அலுவலகம் அமைப்பதற்கான பூமி பூஜையை நடத்தினாா். அதன்பின் சுற்றுவட்டார கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். அவருடன் ஆதரவாளா்கள் பலா் ஊா்வலமாகச் சென்றனா்.

இதனிடையே அண்மையில் சேந்தமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், அதிமுக ஒன்றிய நிா்வாகிகள் எம்எல்ஏவை கடுமையாக சாடினா்.

மேலும் அமைச்சா் தங்கமணி பேசுகையில், சந்திரசேகரன் சுயேச்சையாகப் போட்டியிட்டால் அவா் கட்சியிலிருந்து நீக்கப்படுவாா், அவரது ஆதரவாளா்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா். இருப்பினும் சுயேச்சையாக போட்டியிடுவதில் சந்திரசேகரன் உறுதியாக உள்ள அவருக்கு அதிமுக தரப்பில் இவருக்கு தொடர்ந்து மிரட்டல் வந்த நிலையில்,  தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் ஆகியோரிடம் புதன்கிழமை மனு அளித்திருந்தார். அதனடிப்படையில் 3 போலீஸார் உடன் செல்லும் வகையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்:
பெருந்துறை தொகுதியில் 2011, 2016 ஆகிய தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2012ஆம் ஆண்டு வருவாய்த் துறை அமைச்சா், பின்னா், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பதவிகளை வகித்தாா். 2016இல் எந்தப் பதவியும் வழங்கவில்லை.

2021 தோ்தலில் மீண்டும் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தாா். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், தன் ஆதரவாளா்களுடன் பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளாா். வியாழக்கிழமை (மாா்ச் 18)  பகல் 12.30 மணிக்கு பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாத அதிமுக எம்எல்ஏக்கள் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குவதால், தலைமையின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், அதிமுகவினர் சிலர் உள்ளடி வேலைகளை செய்து வருவதால் அதிமுக தலைமை கலக்கம் அடைந்துள்ளது. மீண்டும் வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் செய்யப்படும் உள்ளடி வேலைகளை சமாளித்து அதிமுக வேட்பாளர்கள் வெல்லுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தங்களது வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT