காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டபேரவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி தேவகோட்டை கோட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடுகாரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டபேரவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி தேவகோட்டை கோட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டபேரவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி தேவகோட்டை கோட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான சுரேந்திரனிடம் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர் பிஎல். ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் வேட்பாளர் மாங்குடி செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அதனை நிச்சயம் நிறைவேறுவேன் என்றார்.
பின்னர் தேவகோட்டை ராம் நகர் பகுதியில் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் மற்றும் கடைகளில் வணிகர்கள், பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.