முகப்பு
தமிழ்நாடு

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி

திருநெல்வேலி அருகன்குளம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
கோப்புப்படம்
பகிர்:


திருநெல்வேலி அருகன்குளம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 

திருநெல்வேலி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் அருண்ராஜ்(18). சமையல் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் அருகன்குளம் தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றாராம். இவர் குளித்துக்கொண்டிருக்கும் போது, ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டாராம். இவருக்கு நீச்சல் தெரியாததால்,  நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. 

உடனடியாக இது குறித்து பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கும், தாழையூத்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடுதலுக்குப் பின்னர் அருண்ராஜ் உடலை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

போலீஸார் உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.