இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகச் செயலர் எம்.ஆர்.இரகுநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான (2021) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிடும் நிகழ்ச்சி, நாளை 22.03.2021 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு 43, செவாலியே சிவாஜி கணேசன் சாலை, தி.நகர், சென்னை - 600 017 முகவரியில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் (பாலன் இல்லம்) நடைபெறுகிறது.
கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் கே.சுப்பராயன் எம்.பி, மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.