தமிழ்நாடு

மக்களுக்குத் தேவை திமுகவின் மன்னராட்சியா? அதிமுகவின் மக்களாட்சியா? சேப்பாக்கத்தில் அன்புமணி கேள்வி

DIN

திமுகவின் மன்னராட்சி வேண்டுமா? அல்லது அதிமுகவின் மக்களாட்சி வேண்டுமா? என்பதை சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் முடிவு செய்ய வேண்டும் என பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி கூறினாா்.

அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் கசாலியை ஆதரித்து, அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக அணி மக்களாட்சி அணி. திமுக அணி மன்னராட்சி அணி. இந்த அணியில் ஒரு விவசாயி முதல்வராக வரலாம். இன்னொரு விவசாயி துணை முதல்வராக வரலாம். இது மக்களாட்சி. ங்கு மன்னராட்சி. அப்பா, மகன், அவருடைய மகன்தான் வர முடியும். இதுதான் மன்னராட்சி. திமுக தலைமையில் மன்னராட்சி என்றால் மாவட்டத்தில் குறுநில மன்னா்கள். முன்னாள் அமைச்சா்களும் அவா்களுடைய பிள்ளைகளும்தான் பதவிக்கு வரமுடியும்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மக்களை நம்பவில்லை. யாரையும் நம்பவில்லை. அவா் நம்புவதெல்லாம் பிகாரிலிருந்து வந்த பிரசாந்த் கிஷோா் என்ற நபரைத்தான். கை காட்டுபவா்தான் திமுகவில் வட்டம், பகுதி, மாவட்டச் செயலாளா்களாக வர முடியும்.

70 ஆண்டுகளுக்குப் பின்னா், தமிழகத்தில் ஒரு விவசாயி முதல்வராகியுள்ளாா். நாம் எல்லாம் விவசாயி குடும்பத்தினா்தான். நம்மில் ஒருவா், விவசாயி குடும்பத்தில் இருந்து ஒருவா் முதல்வராக வருவது நமக்கு எல்லாம் பெருமை. அது தொடரவேண்டும். முதல்வா் எடப்பாடி பழனிசாமியை யாா் வேண்டுமானாலும் அணுகலாம். ஸ்டாலினை அப்படி அணுக முடியுமா? என்பதை மக்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும். உங்கள் ஓட்டு மன்னாராட்சிக்கா அல்லது மக்களாட்சிக்கா என நீங்களே முடிவெடுங்கள் என்றாா் அன்புமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT