முகப்பு
தமிழ்நாடு

கூட்டணிக் கட்சிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களை வழங்கத் தடையில்லை: உயர்நீதிமன்றம்

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மனுதாக்கல் செய்தார். 

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவதை தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு தற்போது உத்தரவிட முடியாது. 

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான சின்னம் ஒதுக்கும் நடைமுறைகள் முடிவடைந்துவிட்டதால், வரும் தேர்தலில் தடை விதிக்க முடியாது. 

அதேநேரத்தில் தேர்தல் முடிந்தபிறகு, இந்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஜூன் 3 ஆம் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →