FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெரியபாளையம் அருகே செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

பெரியபாளையம் அருகே பெரியசெங்காத்தாகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் நவகிரக திருக்கோயிலில் புஷ்கர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

28 ஜனவரி 2024, 1:20 am IST
ஸ்ரீ செல்வ விநாயகர் நவகிரக திருக்கோயிலில் புஷ்கர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
பகிர்:

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள பெரியசெங்காத்தாகுளம் கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் நவகிரக திருக்கோயிலில் புஷ்கர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் நவகிரக திருக்கோவில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

இதன்பன்னர் 12 ஆண்டுகளுக்குப் பின்பு இம்மாதம்  புஷ்கர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 22-ஆம் தேதி அன்று கணபதி பூஜை தொடங்கி கோபூஜை பிரவேச பலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. 23-ஆம் தேதி  சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. 

24-ஆம் தேதி இன்று அதிகாலை மூன்றாம் கால யாக பூஜை கணபதி ஹோமம் ருத்ர ஹோமம் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்ற பின்னர் இன்று காலை 9லிருந்து 10.30 மணி அளவில் ஹோம பூஜைகள் நடைபெற்று பின்னர் ஹோம குண்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரைக் கொண்டு புரோகிதர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் சுற்றி வலம் வந்து பின்னர் கோபுர கலசத்தின் மீது கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

பின்னர் அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள்  சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments