சேவூர் அருகே வெளிமாநில தொழிலாளி அடித்துக் கொலை 
தமிழ்நாடு

சேவூர் அருகே வெளிமாநில தொழிலாளி அடித்துக் கொலை

சேவூர் அருகே பொங்கலுரில் வெளிமாநில தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

சேவூர் அருகே பொங்கலுரில் வெளிமாநில தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொங்கலூர் அருகே தசரா பாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை  வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையில் வெள்ளிக்கிழமை தசரா பாளையம் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் வெளிமாநில தொழிலாளர் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக சேவூர் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை, அடுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் கிடந்த வெளிமாநில தொழிலாளியின் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மேற்கு வங்காளம் பகுதியைச் சேர்ந்த தசொ மார்டி(44). என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தசொ மார்டி, முன் விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டாரா, அல்லது தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக, உடன் பணியாற்றிவரும் 7க்கு மேற்பட்ட தொழிலாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சேவூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை ஒன்றே போதுமே... சேஷ்விதா கனிமொழி!

ஆஷஸ் தொடருக்கான பந்துவீச்சு பயிற்சியில் மார்க் வுட்!

குடும்பச் சண்டை.. மௌனம் கலைத்த லாலு பிரசாத்!

கள்ளச் சிரிப்பில் அந்த வெள்ளைச் சிரிப்பில்... திவ்யா துரைசாமி!

அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

SCROLL FOR NEXT